Posted Date : 06-Apr-2020
Last updated : 06-Apr-2020
அறியாமை எனும் இருளை அகற்றி வாழ்வில் ஒளியேற்றும் 'சாக்கிய முனி புத்தர்'
புத்தரின் பாத அடிகள்
இத்தலத்தின் வரலாறு ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமையானது ஆகும். முன்பு ஒரு காலத்தில் தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக படைவீடு இருந்தது. படைவீடு இயற்கையாகவே நான்கு பக்கம் மலைகளை அரணாக கொண்டு விளங்கியது. மூன்று பக்கம் மலைகளும், ஒரு பக்கம் அடர்ந்த ஜவ்வாது காடுகள் கொண்ட இயற்கை சூழலே அந்த பகுதியில் இராஜ்ஜியங்கள் மட்டுமல்லாது புத்த மதம் செழிதோங்க காரணமாக இருந்திருக்கிறது, மேலும் தொண்டை மண்டலம் புத்த மத செழிப்புற்ற பிரதேசங்களில் ஒன்றாக கருதப்பட்டது. கௌதம புத்தர் தான் ஞானமடைந்த பிறகு வாழ்ந்த 40 ஆண்டுகளில் பல்வேறு இராஜ்ஜியங்களுக்கு பயணம் மேற்கொண்டு புத்த தம்மத்தினை உபதேசித்து வந்தார் அவ்வாறு சென்று உபதேசித்த இராஜ்ஜியங்களில் படைவீட்டை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சோழர்களின் தளபதிகளின் ஆட்சி பகுதியும் அடங்கும். இந்த செய்தியை நிருபிக்கும் வகையில் தற்போது தம்மமலை என்றழைக்கப்படும் சந்தவாசல் மலையின் மேற்கு புற அடிவாரத்தில் அமைந்துள்ள புத்தரின் பாத அடிகளே சாட்சியாகும். மேலும் பகவன் புத்தர் மற்றும் அவரது தலைமைச்சீடர் ஆனந்தர் படைவீட்டு இராஜ்ஜியத்திற்கு வருகை புரிந்ததன் நினைவாக 2000 ஆண்டுகால பழமையான இரண்டு புத்தர் சிலைகள் படைவீட்டிற்கு மேற்கே வேட்டகிரி பாளையத்தில் ரிஷி சன்னதி என்ற பெயர்களில் இரண்டு புத்தர் கோவில்கள் உள்ளன. புத்தர் தங்கியிருந்த காலத்தில் படைவீட்டு இராஜ்ஜியத்திற்கு வருகை புரிந்த முனிவர்கள் மற்றும் புத்த தம்ம அறநெறியாளர்கள் தம்மமலை அடிவாரத்தின் மேற்கு புறமாக கற்களினால் அமைக்கப்பட்ட “வாசல்” இருந்தது அந்த பகுதி தற்போது கல்வாசல் என்றழைக்கப்படுகிறது. கல்வாசல் வழியாக 2 பர்லாங் தொலைவில் உள்ள படைவீட்டை அடைந்ததாக வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இந்த வழியினை அதாவது தம்மமலை அடிவாரத்தின் மேற்கு புறமாக இருக்கும் கல்வாசல் வழியாக செல்ல இராஜ்ஜியத்தின் அரசகுடும்பத்தார்க்கும், அரண்மனை விசுவாசிகளுக்கும், இராஜ்ஜிய ஒற்றர்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் பகவன் புத்தர் மற்றும் புத்த மத அறவணடிகளும் படைவீட்டு இராஜ்ஜியத்திற்கு கல்வாசல் மிதிமலை வழியாக கடப்பதற்காக தங்கி இருந்த இடம் தான் தற்போது முனிவந்தாங்கல் கிராமம் ஆகும். அக்காலத்தில் பகவன் புத்தர் மற்றும் அவரது தலைமைச்சீடர் ஆனந்தர், அறவணடிகளும் ஆகியோர் ஒய்வெடுக்க தங்கிய இடம் தான் தற்போதைய “ சாக்கியமுனி புத்த விஹார்” என்று நம்பப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பும் பழமையும் புனிதமும் அடங்கிய சாக்கியமுனி புத்தவிஹாருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவை;
தீராத இன்னல்கள் தீர்ந்துவிடும் போதிமரம்
சாக்கிய இளவரசர் கௌதம சித்தார்த்தர் புத்த கயாவில் உள்ள புனித போதிமரத்தின் கீழ் அமர்ந்த பின்புதான் உயர்ஞானம் எய்தினார். உலக மானுட விடுதலைக்கான உன்னத மார்க்கத்தை பகவன் புத்தர் கண்டடைய காரணமாகவும் இருந்தது மகாபோதி மரம் தான். இந்த மகாபோதி மரத்தின் குடும்பத்தினைச் சார்ந்த மரம் தான் சாக்கியமுனி புத்த விஹாரில் தலவிருட்சமாக நடவுச்செய்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த போதிமரமானது மாமன்னர் அசோகர் அவர்களால் புத்த தம்ம சேவையாற்றிட இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது மகளும் அறவணடிகடிகளுமான சங்கமித்திரை போதிமரக்கன்றினை தானாமாக அளித்தார். சங்கமித்திரை அவர்கள் கொண்டுச்சென்ற போதிமரத்தினை இலங்கை அனுராதபுரம் புத்த விஹாரில் நடவுச் செய்து பாதுகாத்து வளர்த்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போதிமரம் இலங்கை அனுராதபுரத்தில் இன்றளவும் சாட்சியாக விளங்குகிறது. பின்பு 13.05.1957 அன்று பகவன் புத்தர் பிறந்தநாளன்று பர்மா தேசத்தின் ( தற்போதைய மியான்மர்) பிரதமர் .ப.நூ அவர்களின் திருக்கரங்களால் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட போதிமரக்கன்றினை புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்க மகாபோதி புத்த விஹாரில் நடவுச்செய்தார், இன்று அந்த போதிமரம் மிகப் பெரிய அளவில் விருட்சமாக காட்சி அளிக்கிறது. சாக்கியமுனி புத்த விஹார் நிறுவனர் விஜயலட்சுமி அவர்கள் புத்த தம்மச் சங்கத்தின் பணிக்காக தன்னை அர்ப்பணித்து மாமன்னர் அசோகர் பௌத்தம் தழுவிய கலிங்க தேசத்தில் தற்போதைய புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கமகாபோதி புத்த விஹாருக்குச்சென்று குடும்பத்துடன் புத்த மதம் தழுவினார். மேலும் தனது பூர்வீக கிராமம் ஆன சந்தவாசலில் தம்மமலை அடிவாரத்தில் ஏற்படுத்த உள்ள விஹாருக்கு போதிமரத்தின் மரக்கன்று வேண்டுமென்று கலிங்க மகாபோதி புத்த விஹாரின் அறவணடிகள் அதுல்ஸ்றீ அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அறவணடிகளும் விஜயலட்சுமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதற்கான சம்பிரதாய முறைகளை கடைப்பிடித்து மாமன்னர் அசோகரின் மகளும் பௌத்த அறவணடிகள் சங்கமித்திரை அவர்களால் அனுராதபுரத்தில் நடவுச்செய்து பராமரிக்கப்பட்டு வந்த 2000 ஆண்டுகால பாரம்பரியம் போதிமரத்தின் மரக்கன்றினை விஜயலட்சுமி அவர்களின் தலைமீது வைத்து தமிழகத்தில் புத்த தம்மம் செழிக்க ஆசிர்வதித்து அனுப்பினார். அவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்ட போதிமரக்கன்று சாக்கியமுனி புத்த விஹாரின் தலவிருட்சமாக நடவுச்செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தலவிருட்சமான போதிமரத்தை வணங்கினால் தீராத இன்னல்கள் தீர்ந்துவிடும் மேலும் இந்த போதிமரத்தை வணங்கி, தியானம் செய்தால் அவர்கள் வேண்டிய மன அமைதியும் அவர்களின் துன்பமும் காணாமல் போகும் என்பது வணங்கியவர்களின் அனுபவ உண்மை.
விஹார் உருவாக்கம் மற்றும் திருவுருவ சிலைகளின் வளர்ச்சி
முதலில் சாக்கியமுனி புத்தவிஹார் அறக்கட்டளையின் நிறுவனர் விஜயலட்சுமி அவர்களின் குடும்ப முன்னோடிகள் அன்னை பார்வதி மற்றும் தந்தை மாடசாமி அவர்களின் நினைவாக இரண்டு அடி அளவிலான புத்தரின் சிலை நிறுவப்பட்டது. விஜயலட்சுமி அவர்களின் கணவரும் பௌத்த ஆர்வலரும், ஆய்வாளருமான வேலுசாமி அவர்கள் பல்வேறு புத்தமதம் தொடர்பான பயிற்சிகளை தேடிக் கற்று கொண்டவர். குறிப்பாக கோயாங்காஜீ அவர்களின் தம்மா விபாஸ்ஸன பயிற்சிகள், இமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மான் பூங்கா நிறுவனத்தின் தியான பயிற்சி போன்றவற்றை குறிப்பிடலாம், வேலுசாமி அவர்கள் சாக்கியமுனி புத்த விஹார் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார். புத்தரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கும் நேரிடையாக சென்று தரிசித்துவிட்டு வந்தவர். அவர் சாக்கியமுனி புத்த விஹாரில் நிறவப்பட்டிருந்த இரண்டடி சிலை முன்பு தியானம் மேற்கொள்வது வழக்கம்.
உடலற்ற உருவங்கள் தொடரும் சம்பவம்
மேலும், சாக்கியமுனி புத்த விஹாருக்கு விடுமுறை காலங்களில் வருகை புரிந்து காலையிலும் மாலையிலும் தியானங்களை மேற்க்கொண்டார். அப்போது தியானத்திற்க்காக கண்களை மூடிய நேரத்தில் அவரைச் சுற்றி ஏராளமான 200 க்கும் மேற்பட்ட உடலற்ற உருவங்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அவரையும் அவரது தியானத்தையும் உற்று நோக்குவது போல உணர்ந்தார், மேலும் அன்றிலிருந்து ஒவ்வொரு முறை அவர் சாக்கியமுனி புத்த விஹார் அமைந்துள்ள எல்லை பகுதிக்கு கால் பதித்தவுடன் மீண்டும் அந்த உடலற்ற உருவங்கள் அவரை பின்தொடர்வதும், அவர் தியானிப்பதை கூர்ந்து கவனிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. புத்த தம்மத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் ஏதும் இல்லாத காரணத்தால், இது ஏதோ புரியாத உணர்வு என்று நினைத்து நாட்கள் கடந்தன. இது தொடர்பான தெளிவு பெற வேலுசாமி அவர்கள் ஒரு பௌத்த மடாலாயம் சென்று அங்குள்ள குருவிடம் இந்த உணர்வு குறித்து விளக்கம் கேட்டார், அப்போது அந்த பௌத்த குரு சொன்னதை கேட்டு மிகவும் மனத்தெளிவும் அதனுடன் ஆழமான வேதனையும் அடைந்தார். பௌத்த குரு சொல்லும் போது, முன்பு ஒரு காலத்தில் புத்த மதத்தின் மீதும் அதன் குருமார்கள் மற்றும் நம்பிக்கையுடையவர்கள் மீதும் மிகப்பெரிய வெறுப்பு பிரச்சாரம் செய்து இந்தப் பகுதியில் வாழ்ந்த ஏராளமான பௌத்த பிக்குகளும், புத்த தம்மத்தை ஆதரித்தவர்கள் வெறுப்பு பிரச்சாராத்தாலும், அழிப்பு வேலைகளினாலும் தன் இன்னுயிரை விருப்பமின்றியும் புத்த தம்மத்தை காக்க முடியாத ஆதங்கத்தினாலும் நீத்தனர். சில புத்த பிக்குகள் தங்களின் உடலை விட்டு உயிரை பிரிந்து உடலற்றவர்களாக திரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வரலாற்று பின்னனியில் யாரும் சற்று எதிர்பார்க்காத மாதிரி இந்த மண்ணில் உங்களின் முயற்சியால் புத்த தம்மம் மீட்டுருவாக்கம் செய்யும் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சியால் பெரும் மகிழ்ச்சிக் கொண்டு உங்களை வாழ்த்துவதற்கும், தங்களின் இயலாத ஆதங்கத்தை உங்களின் மூலம் காணவும் உங்களின் பணி சிறக்க ஆசிர்வாதங்களை வழங்கவும் உங்களை நாடி வருகிறார்கள். அவர்களின் எண்ணம், ஆதங்கம் ஈடேறும் வகையில் புத்த தம்மம் செழிக்க இந்த பகுதியில் விஹார் அமைத்து புத்த தம்மம் செழிக்க பாடுபடுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் உங்களுக்கு நன்மையே அளிக்கும். மேலும் உங்களின் புத்த தம்ம பணிகள் அவர்களின் மனதில் உள்ள ஆதங்கத்தை போக்க வேண்டும், அவர்களை மகிழ்விக்கவேண்டும் என்றார். இதுவே சாக்கியமுனி புத்த விஹார் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. சாக்கியமுனி புத்த விஹாரின் நல் நோக்கத்தையும், நல் எண்ணத்தையும் உணர்ந்த உலகம் முழுவதுமுள்ள புத்த தம்ம ஆர்வலர்கள் தானாக முன்வந்து உதவிக்கரங்களை நீட்டியதன் விளைவாக வானத்தையே மேற்கூரையாக கொண்டிருந்த சாக்கியமுனி புத்தருக்கு அழகிய மேற்கூரை அமைத்துக் கொடுத்தார்கள். தொடர்ந்து இருட்டில் வைக்கப்பட்டிருந்த சாக்கியமுனி புத்தர் சிலைகள் வெளிச்சம் பெற வழி வகுத்தனர். மேலும் 15 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்ளும் வகையில் வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தனர். இந்த பலன்களினால் தொடர்ந்து பௌர்ணமிதோறும் புத்த வந்தன நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. துவக்கத்தில் இரண்டு அடி சிலையாக இருந்த பகவன் புத்தர் சிலை இன்று புத்த தம்ம அறநெறியாளர்களின் தானத்தின் பலனாக ஆறு அடி அழகிய சிலையாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்கியமுனி புத்த விஹார் அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள்
இந்திய மண்ணில் பகவன் புத்தர் அருளிய உண்மையான புத்த தம்மத்தை அதன் தூய வடிவில் புணரமைப்பது.
இந்திய புத்த தம்ம அறநெறியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது மற்றும் புத்த தம்ம கல்வியின் மூலம் புத்த தம்மத்தின் வாழ்க்கை நெறிகளை போதிப்பது
இந்திய மற்றும் பிற உலக நாடுகளில் செயல்படும் புத்த தம்ம சங்க அமைப்புகளுடன் இணைந்து பகவன் புத்தரின் போதனைகளை மக்களுக்கு நீண்ட மற்றும் நிலைத்த தன்மையுடன் கொண்டுச்செல்வது.
பகவன் புத்தரின் போதனைகளை பரப்புவது, புத்த தம்ம பண்பாட்டையும், கோட்பாடுகளையும், அதன் பல்வேறு உட்பிரிவுகளையும் மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் செல்வது.
தம்ம நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது குறிப்பாக பௌர்ணமி தோறும் புத்த வந்தன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது
புத்த தம்ம பயிற்சி வகுப்புகளை நடத்துவது, புத்த தம்ம தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துவதன் மூலம் புத்த தம்மத்தின் நீதிமுறைகள், பழக்க வழக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
பௌத்த அறப்பள்ளிகள் மூலம் புத்த தம்ம அறப்பணிகளை நிரந்திரமாக விரிவாக்கம் செய்ய தேவையான விஹார் க்கான கட்டிடங்களை கட்டி எழுப்புவதற்கு அவசியமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை தானாமாக பெறுதல். புத்த தம்ம அறப்பணிகளை மேற்கொள்ள தேவையான பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் உருவாக்கிட பௌத்த மடாலாயம் உருவாக்கப்படும். பௌத்த மடாலாயத்தின் மூலம் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கு பயிற்சி அளிப்பது, பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிச் செய்வது.
கல்வி நிலையங்கள், பள்ளிகள்,கல்லூரிகள், தொழிற்கல்வி மையங்கள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், வரலாற்று ஆய்வு மையங்கள் மற்றும் மலைவாழ்மக்கள், ஊரக, நகர் புற வாழ் மக்களுக்கு உதவி செய்திடும் வகையில் பயிற்சி மையங்களை ஏற்படுத்துவது.
பழமையான புத்தர்கோவிலகளை புணரமைப்பது, புத்த மத சின்னங்களையும், கலைகளையும் பாதுகாப்பது மற்றும் புத்த தம்மம் குறித்த இலக்கியங்கள், நூல்கள் மற்றும் ஆய்வுகளை கண்டறிந்து அவற்றை மறுபதிப்புச் செய்வது.
புத்த தம்ம அறநெறியாளர்களுக்கும், ஏழை எளிய மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை மேற்கொள்ளுதல். குறிப்பாக புத்த தம்மத்தின் உன்னத கருத்துக்களை அவர்களுக்கு போதித்தல் உள்ளிட்ட குறிக்கோள்களை மையமாகக் கொண்டு “சாக்கியமுனி புத்த விஹார்" என்ற பெயரில் அறக்கட்டளை 2014ம் வருடம் துவக்கப்பட்டது. சாக்கியமுனி புத்த விஹாரின் அனைத்துச் செயல்பாடுகளும் நம்பிக்கையாளர்களின் தானத்தின் மூலமாக பெறப்பட்டு முறையாக செலவழிக்கப்பட்டு வருகிறது. சாக்கியமுனி புத்த விஹாரில் எதிர்கால திட்டங்களாக இரண்டு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு புத்த தம்மத்தின் நம்பிக்கையாளர்களிடமும் மற்றும் உயர்ந்த கொடை உள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகள் பொருளாகவோ அல்லது நிதியாகவோ வரவேற்கப்படுகிறது.
தானமளிக்க விரும்புவோர்
உலக அமைதிக்காக தம்மமலை அடிவாரத்தில் ஒரு கோடி ரூபாய் பொருட் செலவில் பிரமாண்ட புத்த விஹார் மற்றும் புத்த கோபுரம் (ஸ்தூபி ) அமைக்க பணி துவக்கப்பட உள்ளது.
சாக்கியமுனி புத்த விஹார் வளாகத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பயிற்சி மையம், அவர்களுக்கான இருபாலர் தங்கும் விடுதிகள், உணவக அறைகள், பயிற்சி மற்றும் தியான அறைகள், அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் போன்ற கட்டிடங்களை எழுப்புவது முக்கிய திட்டங்கள் ஆகும்.
தொடர்புக்கு
வெ.விஜயலட்சுமி
மேலாண்மை அறங்காவலர்,
சாக்கியமுனி புத்த விஹார் அறக்கட்டளை (பதிவு எண் : 71/2014
தம்மமலை அடிவாரம், திருவண்ணாமலை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
அலைபேசி எண் : 8220870548 / 9790924725
அமைவிடம்
திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சந்தவாசல் (படவேடு) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்துசெல்லும் தூரத்தில் சாக்கிய முனி புத்த விஹார் உள்ளது.
- ப.பரசுராமன்
9952357501
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, சந்தவாசல் அடுத்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த தம்மமலை அடிவாரத்தில் கிடைக்கப்பெற்ற 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பவேலைபாடுகளுடன் கூடிய பழமையும் பெருமையும் வாய்ந்த சாக்கிய முனி புத்தர் விஹார் உள்ளது. இவரை தரிசித்து தியானம் செய்தால் வாழ்க்கையில் மனநிம்மதியும் குழந்தை பாக்கியமும் இல்லற வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் நிலைத்திருப்பதோடு மாணவர்களின் ஒழுக்க நெறி மேம்பட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது இங்கு வருபவர்களின் நம்பிக்கையாகவே உள்ளது.
புத்தர் என்ற சொல்லுக்கு விழித்தெழுந்தவன், ஒளியைக் கண்டவன் என்பது பொருளாகும். தன் ஆசையையும் அகந்தையையும் புத்தர் வெற்றிகொண்டார். தான் தனது என்ற நிலையிலிருந்து விலகினார். இதனையே விடுதலை (அல்லது) நிர்வாண நிலை என்றும் கூறுவர்.புத்தரின் பாத அடிகள்

Bank Name : CANARA BANK
Account Name : SAKYAMUNI BUDDHA VIHAR
Account Number : 3040201000086
IFSC Code : CNRB0003040
MICR Code No : 630015004
தானமளிப்பவர்களுக்கு உரிய கௌரவமும், மரியாதையும் அளிக்கும் வகையில் சாக்கியமுனி புத்த விஹாரின் கட்டிட வளாகத்தில் கல்வெட்டில் பெயர்கள் பதிவுச்செய்யப்படும் மேலும் சாக்கியமுனி புத்த விஹாரில் கடைபிடிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தானமளிப்பவர்களின் பெயர்கள் நினைவுக்கூறப்படும்.
உலக அமைதிக்காக தம்மமலை அடிவாரத்தில் ஒரு கோடி ரூபாய் பொருட் செலவில் பிரமாண்ட புத்த விஹார் மற்றும் புத்த கோபுரம் (ஸ்தூபி ) அமைக்க பணி துவக்கப்பட உள்ளது.
சாக்கியமுனி புத்த விஹார் வளாகத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பயிற்சி மையம், அவர்களுக்கான இருபாலர் தங்கும் விடுதிகள், உணவக அறைகள், பயிற்சி மற்றும் தியான அறைகள், அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் போன்ற கட்டிடங்களை எழுப்புவது முக்கிய திட்டங்கள் ஆகும்.
தொடர்புக்கு
வெ.விஜயலட்சுமி
மேலாண்மை அறங்காவலர்,
சாக்கியமுனி புத்த விஹார் அறக்கட்டளை (பதிவு எண் : 71/2014
தம்மமலை அடிவாரம், திருவண்ணாமலை மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
அலைபேசி எண் : 8220870548 / 9790924725
email : sakyamunibuddhavihar@gmail.com
Website: www.sakyamunibuddhavihar.org
Face book: Sakyamunibuddha Tamilnadu