Posted Date : 16-Aug-2022
Last updated : 16-Aug-2022
சுதந்திர தின விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்..
கர்நாடக மாநிலம் சிவமொகா நகரில் சுதந்திர தின விழா பேனரில் சவார்க்கர் படம் இருந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் வைத்திருந்த சவார்க்கர் போஸ்டரை அகற்றிவிட்டு மற்றொரு தரப்பினர் திப்பு சுல்தான் போஸ்டரை வைத்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அகற்றிவிட்டு அங்கு தேசிய கொடியை ஊன்றிய போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.