சங்கீதா ராணி
நாம் நேற்றைய செய்தியில் நீலகிரி மாவட்ட "ஆயா மாடு" ஊழல் அதிகரிகளை பற்றிய மக்களின் கருத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்த தகவல்களின் அடிப்படையில் நேற்றே நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப. அவர்களை நமது நிருபர் தொடர்புகொண்டு கேட்ட போது இது சம்மந்தமாக கமிட்டி அமைத்திருப்பதாக கூறி இருந்தார். நாம் இது பற்றி பொது மக்களிடம் விசாரித்த போது, கமிட்டி என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே என பதிலளிக்கிறார்கள். நேற்று இரவு திடீரென மாவட்ட ஆட்சியர் தாசில்தார்கள் இடமாற்றம் மற்றும் ப்ரோமோஷன் லிஸ்டை வெளியிட்டாராம். இதில் தாசில்தார்கள் ப்ரோமோஷன் லிஸ்ட்டும், ட்ரான்ஸ்பர் லிஸ்ட்டும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதாம். நேற்று இரவோடு இரவாக ஊழல் அதிகாரி சங்கீதா ராணி பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து (அவர் விடுமுறை எடுத்ததாக), சங்கீதா ராணி இருந்த இடத்திற்கு மணிமேகலை என்ற தாசில்தாரை, மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளாராம். இது பற்றி நாம் மேலும் விசாரித்தபோது மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலரான மெரினாவிற்கும், ஆதி திராவிடர் நல அலுவலக சிறப்பு தாசில்தார் சங்கீதாரணிக்கும் பங்கு பிரிப்பதில் சண்டை எனவும் கிசு கிசுக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரிகளே பேசிக்கொள்கிறார்கள். மணிமேகலை ஏற்கனவே குந்தாவில் ஒரு வாரம் மட்டுமே தாசில்தாராக இருந்தவராம். இவரை தற்போது கூடலூரிலிருந்து அவசரமாக ஆதி திராவிடர் நல சிறப்பு தாசில்தாராக மாவட்ட ஆட்சியர் மாற்றியுள்ளது ஏன் என மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளதாம். மேலும் மெரினா அவர்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வினவுகிறார்கள். சங்கீதா ராணிக்கு ஏன் மாற்று பணி வழங்கவில்லை எனவும் அதிகாரிகளே கிசு கிசுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் கமிட்டி அமைத்திருக்கிறோம் என்று கூறுவதால், ஊழல் நடைபெற்றது உண்மைதானே? என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கேள்விகளாக முன் வைக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்களும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும் நேரடியாக தலையிட்டு விசாரணை செய்து நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளனர்.
இன்னசென்ட் திவ்யா மெரினா