லாக்கப்க்கு பயந்து பேக்கப்: குண்டாஸில் குற்றவாளிகளை தெறிக்கவிடும் தஞ்சை எஸ்.பி (Exclusive)

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் I.P.S அவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தை குற்றமற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு பல பணிகளை சிரமேற்கொண்டு செய்துவருகிறார். இவர் பணியேற்ற நாள் முதல் கள்ள லாட்டரி சீட்டு, போலி மதுபான விற்பனை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, மணல் கடத்தல் போன்றவற்றை முற்றிலுமாக ஒழித்திருக்கிறார். இவர் பதவியேற்ற, கடந்த 10 மாதங்களில் மட்டும் 76 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல குற்றவாளிகள், இவரின் அதிரடி நடவடிக்கைகளால் லாக்கப்க்கு பயந்து பேக்கப் செய்வதாக தகவல்.

அதிகம் படித்தவை

^