Posted Date : 19-Nov-2022
Last updated : 19-Nov-2022
பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது.. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் மற்றும் செல்போன் பறிமுதல்!
தூத்துக்குடியில் பொதுமக்களை தாக்கி பைக், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்தாக திருநங்கைகள் 4 பேர் செய்யப்பட்டனர்.
பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஜெகதீசனிடம், அங்கு வந்த திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு மிரட்டி தாக்கி, அவரது வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளனர்.மேலும், அங்கிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சசீருதின் என்பவரையும் அடித்து உதைத்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.