தஞ்சை மாவட்ட ஆட்சியரின் தினசரி அலுவல்களை பற்றிய நமது கள ஆய்வு:தினசரி உறங்கப்போவதோ இரவு 12 மணி,காலை துயிலெழுவதோ 6 மணி, என தினமும் வெறும் ஆறு மணிநேர உறக்கத்தை மட்டுமே தனதாக்கி,மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் மக்களின் நலனிலேயே அக்கறைகொள்கிறார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.ம.கோவிந்த ராவ்.இ.ஆ.ப. அவர்கள்.இவரிடம் மக்கள் எந்த ஒரு கோரிக்கையாக மனு கொடுக்கவந்தாலும்,மனுவை பெற்று தவறாமல் குறிப்பெடுத்து, அதை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்து, அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும்படி உத்தரவிடுகிறார்.இவர் ஏற்கனவே தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தி தஞ்சை மக்களின் பாராட்டை பெற்றவர்.அதுபோல் தினமும் ஒவ்வொரு துறையின் அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார்.மேலும் சம்மந்தப்பட்ட அலுவலங்களுக்கும் நேரில் சென்று பார்வையிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.மேலும் இந்த கொரோனகாலத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை காணொளிக்காட்சி மூலம் நடத்தி அவர்களின் குறைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கிறார்.மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நேரில் ஆய்வுசெய்து,கொரோனவை கட்டுப்படுத்தியதில் மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.நாம் தஞ்சை மக்களின் கருத்தை கேட்டபொழுது, எங்கள் மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எங்கள் மாவட்ட ஆட்சியர் என புகழாரம் சூட்டுகின்றனர்.இவரின் மக்கள் சேவைக்காக நாமும் ஒரு ராயல் சல்யூட் செய்வோம்.
Posted Date : 24-Oct-2020
Last updated : 24-Oct-2020
தஞ்சை மக்களின் நலனில்,அக்கறைகொள்ளும் மாவட்ட ஆட்சியர்:(Exclusive)