தஞ்சை S.P.யின் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி: (Exclusive)

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் I.P.S, அவர்கள் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை மேற்க்கொண்டு வருகிறார். குறிப்பாக தஞ்சை பகுதியில் மணல் திருட்டு, கள்ள லாட்டரி சீட்டு, போலி மதுபான விற்பனை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒடுக்கி, சமூக விரோதிகளின் செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழித்திருக்கிறார். மேலும் நாள்தோறும் காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மன அழுத்தத்தைப்போக்க சிறந்த அறிவுரைகளையும்,பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் . நேற்று (27.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு உறுதிமொழி கூட்டத்தில் நமது நாட்டின் பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக ஊழலை ஒழிப்போம் என்று உறுதிமொழி மேற்கொள்ளபட்டது.

அதிகம் படித்தவை

^