Posted Date : 05-Sep-2022
Last updated : 05-Sep-2022
கேரளாவில் இளம் எம்எல்ஏவை கரம்பிடித்தார் இளம் மேயர்
கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வான சச்சின் தேவ் மற்றும் இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரன் திருமணம் நேற்று நடைபெற்றது.
கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சச்சின் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, தனது 21-வது வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக ஆர்யா ராஜேந்திரன் என்பவர் பதவி ஏற்றார்.நண்பர்களாக இருந்த இவர்கள் வீட்டாரின் அனுமதியுடன் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.