Posted Date : 09-Jan-2023
Last updated : 09-Jan-2023
தனியார் விடுதியின் இரும்பு கேட் சரிந்ததில் சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் விடுதியின் இரும்பு கேட் சரிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.
சென்னை அயனாவரம் பெரியார் பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் முடிந்ததும் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து அவர்கள் தங்கி உள்ளனர்.இந்நிலையில் ரமேஷின் மகன் நித்திஷ் விடுதியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராட்சச இரும்பு கதவு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த கதவு கழன்று சிறுவன் மீது பலமாக விழுந்தது