சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெங்கடேசனை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்த கும்பல் தப்பி ஓடியது. ஓடியவர்களை ரோந்து போலீசார் வாகனத்தில் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியானதுஇந்த கொலை தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட முகமது இமாம், முகமது இஸ்மாயில் ஆகியோரது கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது .
இந்த சம்பவம் தொடர்பாக ரியாசுதீன், பிரவீன்குமார், அகமது பாஷா, முகமது சதாம், முகமது இம்ரான் கான், முகமது ரியாஸ், முகமது யாக்கூப் , மணிமாறன், மோகன்ராஜ், தனுஷ் ஆகிய 10 பேரை விரட்டிப்பிடித்து போலீசார் கைது செய்தனர்.போலீசார் விரட்டிச் சென்று பிடித்த போது தப்பி ஓடிய 4 பேர் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறதுகத்தியை எடுத்த ரவுடிகளாக இருந்தாலும் வலியால் துடித்த அவர்களின் கைகளுக்கு துண்டால் தொட்டில் கட்டி ,மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மனித நேயத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்டனர்மொத்தம் 2 பேருக்கு கைகளிலும், ஒருவருக்கு காலிலும் , ஒருவருக்கு கை மற்றும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் தேமுதிகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு மாடம்பாக்கம் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.கடந்த வருடம் அவரது காதலியின் வீட்டிற்கு பின் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது இமாம், முகமது இஸ்மாயில் ஆகியோர் கொல்லப்பட்டனர்.இந்த இரட்டை கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக வெங்கடேசன் மீது அவரது சகோதரர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.படப்பை குணாவின் ஆதரவாளராக செயல்பட்ட வெங்கடேசனை 4 வாரங்களாக நோட்டமிட்டுள்ளனர்.இந்த கொலை சம்பவத்துக்கு முன்பாக முகமது சதாம், தாங்கள் வெங்கடேசனை கொலை செய்யபோகிறோம் என்று போலீசுக்கு செல்போனில் தகவல் சொல்லி விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.விபரீதத்தை உணர்ந்து போலீசார் அங்கு செல்வதற்குள்ளாக 10 பேர் கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் வெங்கடேசனை கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்