Posted Date : 07-Jan-2023
Last updated : 07-Jan-2023
கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மூன்றாவது நபருக்கு மனுதாரர் வழங்கியது மட்டுமல்லாமல், கிரயமும் செய்திருக்கிறார் எனக் கூறி, அதுசம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்தார்.கோயில் நிலத்தை மூன்றாம் நபருக்கு கொடுக்க என்ன உரிமை உள்ளது என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில்களை பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடரும் நிலையில், கோயில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.