Posted Date : 09-Jul-2021
Last updated : 09-Jul-2021
சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - மா.சுப்பிரமணியன்
சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகா வைரஸின் தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். கேரளாவில் சிலர் சிகா வைரசைல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.