Posted Date : 09-Jul-2021
Last updated : 09-Jul-2021
புதிய விதிமுறைகளை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் அறிவிப்பு
சர்ச்சைக்குரிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி, பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன் புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களை கட்டாயப்படுத்துவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, புதிய தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்க முன் வந்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.தனது தனியுரிமை கொள்கை குறித்து தினமும் பயனர்களுக்கு அறிவிப்பு வழங்கும் வாட்ஸ் அப், அதனை ஏற்க மறுக்கும் பயனர்களின் கணக்கு நீக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.