Posted Date : 04-Sep-2022
Last updated : 04-Sep-2022
மெக்சிகோவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கிச்சூடு..! முன்னாள் மேயர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
மத்திய மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் மேயர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
யெகாபிக்ஸ்ட்லா நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியை, அந்நகரின் முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனாஉட்பட ஏராளமானோர் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது 2 வாகனத்தில் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிர் பயத்தில் அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.இதில், முன்னாள் மேயர் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்தனர்