நாம் சமீபமாக தஞ்சை பெரிய கோவில் சென்ற போது, தஞ்சாவூர் ஹோட்டல் தமிழ்நாடில் தங்க நேரிட்டது. அப்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களும், அங்குள்ள பணியாளர்களும் ஹோட்டல் மேலாளர் பற்றி மிகவும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தனர். நாமும் அவரை பற்றிய கள ஆய்வில் இறங்கினோம். ஹோட்டல் மேலாளர் சிவதாணு 2011ல் உதவி கணக்காளராக பணியில் சேர்ந்தவராம். தற்போது அவருடைய சீரிய பணிகளால் கணக்காளர், மேலாளர் பொறுப்பையும் சேர்த்து வகிக்கிறார். இங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இவரை பற்றி விசாரித்தப்போது, நாங்கள் பல வருடங்களாக தஞ்சை சுற்றுலா வருகிறோம். எப்போது வந்தாலும் தமிழ்நாடு ஹோட்டலில் தான் தங்குவோம். இங்கு இருக்கும் மேலாளர் எங்களை தன் வீட்டாரை கவனிப்பதுபோல் மிகவும் நன்றாக கவனிக்கிறார். இங்குள்ள ஹோட்டல் அறைகளும் மிகவும் பாதுகாப்பாகவும், சுகாதாரம் உள்ளதாகவும் உள்ளதால் நங்கள் எந்த பயமுமின்றி இங்கு தங்குகிறோம். இங்குள்ள பணியாளர்களும் எங்களை சிறப்பாக கவனிக்கின்றனர். மேலும் நாம் இவரை பற்றி விசாரித்தபோது, கடந்த கொரோனா காலங்களில், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்களை கவனிப்பதில் (உணவு,அவர்களுக்கு தேவையான உடைமைகள், தனிமை படுத்துவதில் தனி பகுதி) இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நாம் மேலாளருக்கே தெரியாமல் தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு ரவுண்ட் செய்தோம். இதில் ஹோட்டல் அறை, ரிசப்ஷன் முதற்கொண்டும் பளிச்சிட்டன. இதில் மிகவும் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் ஹோட்டலின் கிட்சன் அறையும், ஹோட்டலின் தோட்ட பகுதியும் தான். இங்குள்ள பணியாளர்கள் கிச்சனை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதுபோல் நாம் எங்கும் பார்த்ததில்லை. தோட்ட பகுதியை பொறுத்தவரை மேலாளரே தன் கைகளால் இயற்கையான உரமிட்ட காய்கறிகளை பயிரிட்டு, வாடிக்கையாளர்களுக்கு உணவாக கொடுப்பதில் மிகவும் சிரத்தை எடுக்கிறார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த வீட்டைப்போல் நினைத்து தங்குவதில் பெருமைகொள்கின்றனர். இவரை போன்ற அரசு அதிகாரிகள் தான் அரசுக்கும், மக்கள் பணிக்கும் பெருமை சேர்க்கின்றனர். இவரின் சீரிய பணியை வாடிக்கையாளர்களும், அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர். அவரின் மக்கள் பணியை நாமும் பாராட்டுவோம்.
Posted Date : 17-Nov-2020
Last updated : 17-Nov-2020
தமிழ்நாடு ஹோட்டலின் தரத்தை உயர்த்திய தஞ்சை மேலாளர்:(Exclusive)