Posted Date : 28-Nov-2020
Last updated : 01-Dec-2020
தஞ்சை பா.ஜ.க.வின் துணிச்சல் மிக்க மேற்கு ஒன்றிய செயலாளர்:(Exclusive)
நமது டீமின் கள ஆய்வின் நேற்றைய செய்தியில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி தலைவரின் அடாவடிகளை செய்தியாக வெளிட்டு இருந்தோம். சமூக ஆர்வலர்கள் பலர் இந்த சம்பவத்தை வழக்காக தொடுக்கப்போவதாக குறிப்பிட்டு இருந்தோம். நாம் குறிப்பிட்டது போலவே தஞ்சை பா.ஜ.க.வின் தெற்கு மாவட்ட, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரமணிகண்டன் என்பவர் இந்த சம்பவத்தை வழக்காக தொடுத்துள்ளார். இவருக்கு பல்வேறு வழிகளில் மிரட்டல்கள் வருகிறதாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வழக்காக தொடுத்த பாஜக மேற்கு ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனராம்.