Posted Date : 15-Aug-2022
Last updated : 15-Aug-2022
கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளி கலவர சம்பவம்.. வீடியோ உதவியால் மேலும் 3 பேர் கைது.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் சம்பவம் தொடர்பாக மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலவரம் நடைபெற்ற போது அந்த பள்ளியின் வளாகத்தில் மாட்டுப்பண்ணை பொறுப்பாளரை மிரட்டி மாடுகளை கொள்ளை அடித்துச் சென்ற சின்னசேலத்தைச் பூவரசன், மணிகண்டன் மற்றும் ஆதிசக்தி ஆகிய 3பேரை வீடியோ மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.