Posted Date : 04-Sep-2022
Last updated : 04-Sep-2022
கார் டிரைவர் 50 லட்சம் ரூபாயுடன் மாயமாகிவிட்டதாக தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி போலீசில் புகார்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருக்கு சொந்தமான 50லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற அவரது கார் ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராவார். உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் 50லட்சம் ரூபாயுடன் பெரியகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.ஆண்டிப்பட்டி அருகே சென்ற போது நாராயணன் தனது காரில் இருந்து இறங்கி வேறு காரில் ஏறி விட்டு கார் ஓட்டுனர் ஸ்ரீதரிடம் பணத்தை வீட்டில் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார்.ஆனால் ஸ்ரீதரோ பணத்துடன் தலைமறைவாகி விடவே அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனது கணவரை காணவில்லை என ஸ்ரீதரின் மனைவியும் போலீசில் புகார் செய்துள்ளார்.