Posted Date : 07-Jan-2023
Last updated : 07-Jan-2023
இளைஞர்களுக்கு போதைக்காளான், கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
கொடைக்கானலில் இளைஞர்களுக்கு போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த 5பேர் பூண்டி கிராம வனப்பகுதி அருகில் உள்ள விடுதியில் தங்கி போதை காளான்களை உட்கொண்டதாக கூறப்படுகிறது.இதில் 2பேர் போதை காளானை தேடி அடர்ந்த வனப்பதிக்குள் சென்று வழி மாறி 3 நாட்களாக தவித்து வந்துள்ளனர். அவர்களை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற சிலர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போதைக்காளான் விற்பனை செய்தவர்கள் பிடிபட்டனர்.