103 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் முகேஷ் அம்பானி

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை பெற்றுள்ளார் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி .அவருடைய சொத்தின் மதிப்பு சுமார் 103 பில்லியன் டாலராகும்.கடந்த ஆண்டு மதிப்பை விட இது 24 சதவீதம் கூடுதலாகும்.இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் அடானி குழுமத்தின் தலைவரான கவுதம் அடானி என்றும் அவர் கடந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அவருடைய ஒட்டு மொத்த செல்வத்தின் மதிப்பு 81 பில்லியன் டாலர். கடந்த ஆண்டில் மட்டும் அடானியின் செல்வம் 49 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டின் புதிய பில்லியனர் வரிசையில் நைகா நிறுவனர் ஃபால்குனி நாயர் இடம் பெற்றுள்ளார்.

அதிகம் படித்தவை

^