அரசு நிகழ்ச்சியில் பேண்ட் சட்டையில் சிறுநீர் கழித்த சூடான் அதிபர்.. வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், பத்திரிகையாளர்கள் 6 பேர் கைது!

அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், வீடியோவை பகிர்ந்ததாக கூறி பத்திரிகையாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் அரசு நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதிபர் சல்வா கீர் அவரது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது அங்கிருந்த கேமராக்களில் பதிவானது.இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், அதுகுறித்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

அதிகம் படித்தவை

^