Posted Date : 16-Nov-2022
Last updated : 16-Nov-2022
இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய் கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!
இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைதுசெய்தனர்.
மதுரவாயலை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், மாணவியின் தாய் அளித்த புகாரில் ஜார்ஜிடன் விசாரணை செய்த மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.