மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்: (Exclusive)

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் சுமார் 92 பேர் கொரோனா பேரிடர் காரணமாக வேலைவாய்ப்பின்றி தவிப்பாகதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு உடனே கொண்டு செல்லப்பட்டது.மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் 2000 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக உடனே பொருட்களை பெற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார். பொருட்களை பெற்று கொண்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரை வெகுவாக பாராட்டினர். மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே அதே இடத்தில் தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் எங்களுக்கு இந்த உதவி, பேருதவியாக இருந்ததை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகம் படித்தவை

^