குற்றாலம் காவல் ஆய்வாளரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ் மீது தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றாலத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தாமஸ் மீதும் ஏராளமான புகார்கள் சென்ற நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டார்.

அதிகம் படித்தவை

^