Posted Date : 20-Nov-2022
Last updated : 20-Nov-2022
தீவிரவாதம் தீவிரவாதம் தான் . எந்த அரசியல் காரணமும் அதனை நியாயப்படுத்தாது" - ஜெய்சங்கர்
தீவிரவாதம் தீவிரவாதம் தான், அதனை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அரசு கொள்கையாக வைத்திருக்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற ஜெய்சங்கர் தீவிரவாதத்தை கடுமையாக கண்டனம் செய்தார்.பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐநா.சபையில் தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீனா முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.