காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டார். தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராம்க்கும் சண்டை போக்கு இருப்பதால், அதை விட காயத்ரி ரகுராம்மே சமூகவலைதள பக்கங்களில் பாஜகவில் இருந்து விலகி விட்டதாக பதிவு போட்ட பின்னால், அவரை கட்சியில் தொடர்ந்து வைத்து கொள்ள முடியாது என்கிற சூழ்நிலையால், இந்த முடிவை எடுத்து இருக்கிறது பாஜக தலைமை கடந்த வருஷம் குடித்து விட்டு வாகனம் ஒட்டியது. அதனால் காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. சர்ச்சனையானதும் அப்படியே ஒதுங்கி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார் திரும்பவும் கட்சியில் அவருக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக நியமனம் செய்தார்கள். டெய்சி ராணி , திருச்சி சூர்யா விவகாரத்தை ட்விட் போட்டது மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை இது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டு இருக்கும் நிலைமையில் இப்படி காயத்ரி ரகுராம் ட்விட் போட்டது கண்டிக்கதக்கது என அண்ணாமலை தெரிவித்து இருந்தார் உடனடியாக திருச்சி சூர்யாவை கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என அண்ணாமலை உத்தரவு போட்டு இருந்தார் இருந்தாலும் அண்ணாமலை தலைவரான பின்னால் பாஜக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்தார் இதனால் அண்ணாமலை காயத்திரி ரகுராம் இடையே புகைச்சல் அதிகமானது அதன் பின்னர், நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என ட்விட் போட்டு இருந்தார். அண்ணாமலையால் பாஜகவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார் தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதனுக்கு வாட்ச் ஆப்பில் தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார் காயத்ரி ரகுராம். 6 மாதம் கட்சியில் இருந்து விலக்கபட்ட காயத்ரி ரகுராம், தன் சுய விருப்பத்தின் பேரில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கபட்டார். வழக்கும் போல் கட்சியில் இருந்து விலகுபவர்களுக்கு எங்கிருந்தாலும் வாழ்க என தெரிவித்து , இன்று கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலக்கபட்டார்..
Posted Date : 14-Jan-2023
Last updated : 14-Jan-2023
காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கபட்டார்..!