முதல் டோஸுக்குப் பிறகு 8 முதல் 16 வாரங்களுக்கு இடையே 2-வது கோவிஷீல்ட் டோஸ் போட்டுக் கொள்ளலாம் - NTAGI

முதல் டோஸுக்குப் பிறகு 8 முதல் 16 வாரங்களுக்கு இடையே இரண்டாவது கோவிஷீல்ட் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என NTAGI எனப்படும் நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது, கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ், முதல் டோஸுக்குப் பிறகு 12 முதல் 16 வாரங்களுக்கு இடையே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் NTAGI விடுத்துள்ள அறிக்கையில், கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் எட்டு வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டால் உடலில் ஆன்டிபாடி பெருகுவதாகத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 6 முதல் 7 கோடி பேருக்கு விரைவில் கோவிஷீல்டு மருந்தின் 2வது டோஸ் வழங்கப்பட உள்ளது.

அதிகம் படித்தவை

^