சட்டம் - ஒழுங்கு பிரச்சனை : சட்டப்பேரவையில் முதலமைச்சர் - இபிஎஸ் காரசார விவாதம்

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாட்டி பேசியதோடு, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினார்.பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

அதிகம் படித்தவை

^