Posted Date : 09-Jul-2021
Last updated : 09-Jul-2021
இந்தியாவில் 90 மாவட்டங்களில் 80 சதவீத கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் புதிதாக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட இந்தியாவில் 90 மாவட்டங்களில் இருந்து மட்டும் 80 சதவீதம் அளவுக்கு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதுடன், குணமடைவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிரித்துள்ளது என்றார்.பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது, கொரோனாவுக்கு அழைப்பு விடுப்பது போல் ஆகி விடும் என்றும் வி.கே.பால் எச்சரித்தார்.