Posted Date : 20-Jun-2021
Last updated : 20-Jun-2021
கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என எண்ணி அலட்சியம் காட்ட வேண்டாம்
கொரோனா 3-வது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நினைக்க வேண்டாம் எனவும், அனைவருமே விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் முதலமைச்சருடன் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3-வது அலை அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றார்.முதல் மற்றும் இரண்டாம் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும், குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாததால் 3ஆவது அலையில் அதிகளவில் ஆபத்து ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.