பண்டிகைக் காலங்களையொட்டி பொது மக்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையரின் அறிவுரை:(Exclusive)

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.ஜே.லோகநாதன் I.P.S அவர்கள், பண்டிகைக் காலங்கள் அடுத்தடுத்து வருவதால் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிக்கமுடியும், பண்டிகைக் காலங்கள் வரவிருப்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே செல்ல நேரிடும்போது, கண்டிப்பாக இந்த மூன்று நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. கண்டிப்பாக முகக்கவசம் சரியாக அணிய வேண்டும். 2. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 3. அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் பொதுமக்களுடைய நலனை கருதி காவல்துறையினர் எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் நாம் ஒத்துழைப்போம். கொரோனாவை நாம் வெல்வோம், என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை

^