இன்னசென்ட் திவ்யா (மாவட்ட ஆட்சியர்)
நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் 1084 கறவை மாடுகள் வழங்கப்பட்டதாம். இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட துறை அதிகாரிகளின் சார்பில் மிகப் பெரிய தொகையிலான ஊழல்கள் நடைபெற்றுள்ளதாம். மேற்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப. அவர்களின் உத்தரவோடு மாவட்ட ஆதி திராவிடர் நலஅலுவலரும் , துணை ஆட்சியருமான மெரினா அவர்களின் தலைமையில், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலக சிறப்பு வட்டாட்சியர் சங்கீதா ராணி முன்னிலையிலும் வழங்கப்பட்டதாம். அங்குள்ள மக்களிடம் இது பற்றி விசாரித்த போது, தமிழக அரசால் ஒரு மாட்டின் விலை மதிப்பு ரூ .34,500/- என்ற வீதம் நிர்ணயித்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாம் . ஆனால் மெரினா அவர்களும், சங்கீதா ராணி அவர்களும் சேர்ந்து வெறும் ரூ .6,000/- அளவுக்கு கூட விலை பெறாத ஆயா மாடுகளை பழங்குடியினருக்கு வழங்கி பெருத்த முறைகேட்டில் ஈடுபட்டு சம்பாதித்து விட்டனராம்.இதில் சில மாடுகள் இறந்த நிலையிலும், பல மாடுகள் இப்போவோ அப்போவோ என்ற நிலையிலும் உள்ளதாம். இதில் குந்தா வட்டம் பெல்லத்தி கம்பையில் உள்ள எஸ் டி மக்களுக்கு பத்து குட்டிகளை ஈன்ற ஆயா மாடுகளும் வழங்கப்பட்டதாம்.இதில் சில மாடுகள் நடக்கவே தள்ளாடுகிறதாம். மேலும் கறிக்கடைக்கு செல்ல வேண்டிய ஆயா மாடுகளை பழங்குடியின மக்களுக்கு ஏமாற்றி வழங்கியதை அங்கு ஆய்வுக்கு வந்த கால்நடை மருத்துவர்களும் உறுதி செய்தார்களாம். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு எஸ் டி மக்கள் புகார் அளித்தும் மெத்தன போக்கான பதிலே தருகிறாராம். இதில் மெரினா அவர்களின் கணவரான இருதயராஜ் என்பவர்தான் ஆல் இன் ஆலாம். இவர்கள் அன்னை தெரசா என்ற பெயரில் சென்னையில் டிரஸ்ட் நடத்துவதாக மக்கள் கிசு கிசுக்கிறார்கள். இங்கு சம்பாதிக்கும் ஊழல் பணத்தை இந்த டிரஸ்டில் இன்வெஸ்ட் செய்து ஒயிட்டாக மாற்றுகிறார்கள் எனவும் தகவல் சொல்கிறார்கள் . இன்னொரு அதிகாரியான சங்கீதா ராணியும் பெருத்த ஊழல் ராணி என கிசு கிசுக்கிறார்கள் . இவர் வாங்குவதும் தெரியாதாம், இன்வெஸ்ட் செய்வதும் தெரியாதாம். இவர் ஏற்கனவே கூடலூர் பகுதியில் தாசில்தாராக இருந்தபோது நிறைய சம்பாதித்து விட்டதாக மக்கள் கிசு கிசுக்கிறார்கள். இவரை பற்றி பிறகு விரிவாக செய்தியாக காண்போம். மேலும் மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யா தனது சமூகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தவறு செய்தாலும் கண்டு கொள்வதில்லையாம். அதே போல்தான் மெரினா விஷயத்திலும் நடக்கின்றதாம்.ஊழல் ராணிகளான இவ்விருவரையும் காப்பாற்றுவதில் முனைப்பு கொள்கிறாராம். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பல வருடங்களாக இங்கு பணியில் இருக்கிறாராம். இவரை இங்கிருந்து மாற்றுவதென்பதும் முடியாத ஒன்று என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களே கிசு கிசுக்கிறார்களாம். இந்த ஊழல் வாதிகளை தமிழக அரசும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் ஆதங்கப்படுகின்றனர். தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமா ?
மெரினா
சங்கீதா ராணி