தஞ்சாவூர் தாலுக்கா நாஞ்சி கோட்டை ரோடு, விளார் சாலை அருகில் நவீன் குமார் என்பவர் பத்மநாபன் நகரில் வீட்டு மனை ஒன்றை வாங்குகிறார் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறாராம். இவர் தனது மனை பிரிவினை DTCP அனுமதி பெற உள்ளூர் திட்டக்குழுமம் அலுவலகத்தில் ரூபாய் 500 க்கு கூறாய்வு கட்டணம் செலுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கான தபாலை பெற்று,வட்டார வளர்ச்சி அலுவலர் ( BDO) (கிராம ஊராட்சிகள்) அவர்களிடத்தில் தனது மனையை வரன்முறை செய்து தரக்கோரி மனு அளித்திருக்கிறார். அதில் வரன்முறை கட்டணம் மற்றும் கொடிநாள் நிதியாக ரூ.1000 கட்ட சொல்லி கடித குறிப்பு ஒன்றினை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளிக்கிறார்கள். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ராவ் என்கிற மஹாதேவ்ராவ் என்பவர் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறாராம் ஆனால் இவர் உதவியாளர் பணியையும் சேர்த்தே செய்கிறாராம்.வட்டார வளர்ச்சி அலுவலர், நவீன்குமாரை மஹாதேவ்ராவை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்திருக்கிறார்.மஹாதேவ்ராவை நவீன்குமார் அணுகியபோது ரூபாய்.5000 கொடுத்தால்தான் உங்கள் வேலை முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியிருப்பதாக இவரிடத்தில் சொல்லிருக்கிறார். இதனால் நவீன்குமார் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனுவை அளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையின் டி.எஸ்.பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சசிகலா,பத்மாவதி முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பாலசுப்ரமணியன், இளநிலை உதவியாளர் ராவ் என்கிற மஹாதேவ்ராவ் என்பவர்களை லஞ்சம் வாங்கும்போது அதிரடியாக கைதுசெய்தனர், அவர்களை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர்,தனி நீதிபதி ஊழல் தடுப்பு சட்டங்கள் அவர்களிடத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிபதி அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அவர்களை கும்பகோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
மஹாதேவ்ராவ்
கே.பாலசுப்ரமணியன்