டிராபிக் போலீஸ்ன்னா.. சந்துல நின்று மறித்து ஹெல்மெட் போடலன்னா பைன், லைலென்ஸ் இல்லைன்னா பைன் அப்படின்னு நிப்பாட்டி டார்ச்சர் செய்வாங்கனு தான் எல்லாரும் நினைக்கிறோம் அவங்க செய்யுற சில செயல்கள் மனிதர்கள் மதிக்கிறப்படி இருக்கிறது திருச்சி குழுமணி போற சாலையில் குண்டும் , குழியுமா இருக்கிறது.
அந்த பகுதியில் டிராபிக் அதிகமாகி விடுகிறது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இது போக்குவரத்து போலீசாருக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது. மீன் மார்கட்டுக்கு முன்னாடி , பெரிய பள்ளம் அந்த பள்ளத்தை மாநகராட்சி நிர்வாகம் மூடாமல் வைத்து இருந்தார்கள் போலீஸ்சாரும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை அங்கிருந்த டிராபிக் போலீஸ்சார் உடனடியாக களத்தில் இறங்கினார்கள் அவர்களே, அந்த பெரிய பள்ளத்தை சரி செய்தார்கள் . அந்த பகுதியில் வாகனத்தில் செல்லும் நபர்கள், டிராபிக் போலீஸ்சாரின் இந்த செயலலை வெகுவாக பாராட்டினார்கள் விடியற்காலையில் இப்படி டிராபிக் போலீஸ் தன்னிச்சையாக பெரிய பள்ளத்தை மணல் கொண்டு மூடி,
அந்த பகுதியில் செல்லும் மக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாமல் பார்த்து கொண்டதோடு இல்லாமல், யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல், போலீஸ் அதிகாரி முதற்கொண்டு, அனைவரும் இணைந்து செயல்பட்டு, அந்த பள்ளத்தை மூடியது, வரவேற்ப்பை பெற்று இருக்கிறது இனிமே டிராபிக் போலீஸ்ஸை பார்த்தால் ஒரு சல்யூட் வைத்து விட்டு செல்லுங்கள்..