Posted Date : 07-Jan-2023
Last updated : 07-Jan-2023
போகி பண்டிகைக்கு தீயிட்டு எரிக்கவுள்ள பொருட்களை ஜன;8 -13 வரை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கலாம் - சென்னை மாநகராட்சி
போகி பண்டிகைக்கு தீயிட்டு எரிக்கவுள்ள பழைய துணிகள், டயர் மற்றும் நெகிழி ஆகியவற்றை வரும் 8 முதல் 13-ஆம் தேதி வரை தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி சார்பில், சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கார்டூன் காணொலியில், தங்கள் வீடு தேடி வரும் தூய்மைப் பணியாளர்கள் பழைய துணியை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.