இளம் வயதில் காவல் துறையில் உயர்ந்த பதவிகளை வகித்து நாள்தோறும் தனது அதிரடி நடவடிக்கைகளால் குற்றங்களை குறைத்துவரும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் I.P.S. அவர்களை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர், விஸ்வநாதன், அகிலா தம்பதியருக்கு மூத்த மகனாய் பிறந்தவர். இவர் U.P.S.C. தேர்வில் வெற்றிபெற்று 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருப்பரங்குன்றத்தில் A.S.P.யாக தனது முதல் பணியை தொடங்கினார். இவர் 2011-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். அதன்பின் மதுரையில், திருமங்கலம் ஜாயிண்ட் S.P.யாகவும், திருச்சி சிட்டி D.C.யாகவும், சேலம் சிட்டியில் D.C. யாகவும் (Crime - Traffic) பணியாற்றியுள்ளார். மேலும் நாமக்கல் S.P.யாகவும் பதவியேற்று பல அதிரடிகளைக்காட்டினார். மேலும் சென்னை சிட்டி D.C.யாகவும் (Traffic East), மதுரை சிட்டி D.C.யாகவும் (Law Order) பதவி வகித்த இவர் தற்பொழுது, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இங்கும் பல அதிரடிகளை காட்டி குற்றங்களை குறைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனவை கட்டுப்படுத்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களின் குறைகளை நிறைவேற்றுவதில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதில் முக்கிய பங்காற்றுகிறார். இந்த கொரோனா காலத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறையை முடுக்கிவிட்டு, மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றிய பிரசுரங்கள் அளிப்பதையும், மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்படுவதையும் நேரில் பார்வையிடுகிறார், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும், தவறாமல் விஜயம் செய்து காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மனஅழுத்தத்தை போக்க சிறந்த அறிவுரைகளையும், பயிற்சிகளையும் வழங்குகிறார். மக்களின் புகார் தொடர்பான நடவடிக்கைகளை, உடனுக்குடன் முடுக்கிவிடுகிறார். தனது அதிரடிகளால் நீலகிரி மாவட்ட மக்களின் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ளார். இவரின் மக்கள் சேவையை சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.
Posted Date : 27-Oct-2020
Last updated : 27-Oct-2020
இளம் வயதில் அதிரடிக்காட்டும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-பயோபிக் (Exclusive)