Posted Date : 03-Dec-2022
Last updated : 03-Dec-2022
மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தில் பிரச்சனை - முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்..!
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் மீது அவரது தாய் அளித்த புகார் தொடர்பாக முசிறி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜனத்பிரியா, சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார்.
அண்மையில், ராஜ்கிரண் மனைவி கதீஜா சென்னை போலீசில் அளித்த புகாரில், தனது கணவர் ராஜ்கிரன் பற்றி ஜனத் பிரியா அவதூறாக பேசியதாகவும், குடும்ப நகையை எடுத்துச் சென்றதாகவும் கூறி இருந்தார்.இது தொடர்பாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜனத் பிரியா தரப்பினர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, இரு தரப்பினரும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.பிரச்சனை ஏற்படுமாயின் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காண வேண்டுமென இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.