Posted Date : 19-Sep-2022
Last updated : 19-Sep-2022
அமைச்சர் கார் டிரைவர் வசூல் வேட்டை நடத்திட்டு இருக்கிறாராமே? .
அமைச்சர் நாசர்ட்டே வெகு காலமாக டிரைவராக பணியாற்றுகிறார். அதனால் அவர் கூட கார்ல போகும் போது டிரைவர் சில மாவட்ட நிர்வாகிகளை பற்றி சொல்வார். அவர்களை பற்றி தெரிந்து கொண்டு, நேரிடையாக பார்க்கும் போது அமைச்சர் நிர்வாகிகளை சப்தம் போடுவார் என்கிறார்கள் இந்த நிலைமையில் தான் டிரைவர், திமுக நிர்வாகிகளிடம் வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டார். அவர் கேட்பதை கொடுத்து விடுகிறார்கள். இல்லை என்றால், அவர்களை பற்றி தப்பு தப்பாக போட்டு கொடுத்து விடுகிறார் டிரைவர். அமைச்சர்க்கு பயந்து சிலர் கொடுக்கிறார்கள். அந்த கமிஷன் பணத்தில் தற்போது வீடு கட்டி கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் டிரைவர் கட்டிங் போடுவது அமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை? என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்..