Posted Date : 20-Dec-2022
Last updated : 20-Dec-2022
பாஜக நிர்வாகி அறிமுக கூட்டத்தில் இரு கோஷ்டிகள் இடையே வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு..!
சிதம்பரத்தில் பாஜக நிர்வாகி அறிமுக கூட்டத்தில் இரு கோஷ்டிகள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிதம்பரம் நகர பாஜக தலைவராக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்கும் கூட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.ஆனால் ஊர்வலம் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.இதையடுத்து இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.