இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கான திருவிழாவில் மும்பை இந்தியன்ஸும் , டெல்லி கேப்பிடல்ஸும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பலம்வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இதற்கு முன் நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதில் ஒருமுறை தவிர இறுதி போட்டிகளில் போட்டியிட்ட, அனைத்து போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ளது. பொதுவாக மும்பை இந்தியன்ஸின் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், இஷான் கிசான், டி காக், போலார்டு ஆகியோர்கள் நல்ல பார்மில் உள்ளனர். ரோஹித் ஷர்மாவை பொறுத்தவரை கடந்த போட்டிகளில் சரியாக சோபிக்கவில்லை. பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், பும்ரா, க்குருணால் பாண்டியா, ராகுல் சாஹர் நல்ல பார்மில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷிகர் தவான், ஸ்டோனிஸ், ரிஷாப் பண்ட் ஆகியோர் மட்டுமே நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை ரபாடா, நோர்க்கியா, அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். டெல்லி அணியை பொறுத்தவரை கோப்பையை வெல்வதென்பது கானல் நீராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணியே மீண்டும் கோப்பையை வெல்லும் என அனைவராலும் எதிர்நோக்கப்படுகிறது.