Posted Date : 16-Oct-2022
Last updated : 16-Oct-2022
அமைச்சர்களுக்குள் போட்டி? .
.
திமுக பொதுக்குழு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து இருந்தார்கள். அவர்களுக்கு பொதுபணித்துறை அமைச்சர் வேலு பேசுவதற்கு முன்பாக மேடையில் இருந்தவர்களுக்கு சால்வை அணிவித்தார் அப்போது அனைவரும் எழுந்து சால்வையை வாங்கி கொண்டார்கள். ஆனால் , அமைச்சர் நேரு மட்டும் எழுந்திரிக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தார். வேலுவும் சிரித்தப்படி அவருக்கு சால்வை அணிவித்தார். அந்த சால்வை அப்படியே தன் பின்னாடி நின்று இருந்த பிஏவிடம் தள்ளி விட்டார் நேரு முதல்வரிடம் யாரு நெருக்கமாக இருப்பது என்பதில் நேருவுக்கும், வேலுக்கும் பிரச்சனை என்கிறார்கள். அதனால் தான் வேலு மீது கோபத்தில் இருக்கிறார் நேரு என்கிறார்கள்..