Posted Date : 15-Aug-2022
Last updated : 15-Aug-2022
முதல் உலகப்போரில் காணாமல் போன அமெரிக்க போர் கப்பல் கண்டுபிடிப்பு.!
முதல் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் சிதைவை பிரிட்டின் ஆழ்கடல் நீச்சல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கார்னிஷ் செல்டிக் கடல் தீவு கடற்கரையில் இருந்து 40 மைல் தொலைவில் கடலுக்குள் மூழ்கி இருந்த ஜேக்கப் ஜோன்ஸ் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது, அமெரிக்கா இந்த பெரிய போர் கப்பலை பயன்படுத்தி வந்தது.1917-ஆம் ஆண்டு இந்த கப்பல் மீது மேற்கொண்ட தாக்குதலில் கப்பல் மூழ்கியதுடன், அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.