Posted Date : 13-Jan-2023
Last updated : 13-Jan-2023
ஆளுநர் மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மக்களுக்கு பணியாற்ற அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்குப் பணியாற்றுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.ஆளுநர் என்பவர் அரசியல் கருத்துகளுக்கு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதாக அக்கடித்ததில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.