Posted Date : 20-Dec-2022
Last updated : 20-Dec-2022
7பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டேன்... கரூரில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர் திருவிக பேட்டி
பழிவாங்கும் நடவடிக்கையில் 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக கரூரில் கடத்தப்பட்டு மீட்கபட்ட மாவட்ட கவுன்சிலர் திருவிக தெரிவித்துள்ளார்.
கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் வேடசந்தூர் அருகே காலையில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்விஜயபாஸ்கர் காரை தாக்கி அதில் இருந்த அதிமுக மாவட்ட கவுன்சிலரும் துணைதலைவர் வேட்பாளருமான திருவிக என்பவரை சுமார் 3 கார்களில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது.பின்னர் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திருவிக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சைக்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த துணை தலைவர் தேர்தலில் பங்கேற்ககூடாது என்பதற்காக தான் கடத்தப்பட்டதாகக் கூறினார்.