அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது.!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது.ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.இந்த கால கட்டத்தில் வெயிலின் அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும், அதிகளவு தண்ணீர், பழச்சாறுகள் உள்ளிட்ட வெப்பத்தை தணிக்க க்கூடிய உணவு வகைகளை அருந்துமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிகம் படித்தவை

^