*கடைப்பிடி கடைசிவரை* கோவை S.P.அர.அருளரசு அவர்களின் கொரோனா விழிப்புணர்வு: (Exclusive)

கோவை S.P யின் கொரோனா விழிப்புணர்வு பற்றிய நமது கள ஆய்வு: 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு.அர.அருளரசு அவர்கள், கோவை பகுதி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார். தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு தினமும் விஜயம் செய்து, காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். கே.ஜி.சாவடி, பி.என்.பாளையம், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் போன்ற முக்கியமான பகுதிகளில் போலீசாரை முடுக்கிவிட்டு, பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதுபற்றிய விழிப்புணர்வையும், துண்டுப்பிரசுரங்கள் அளிப்பதையும் நேரில் பார்வையிட்டு, சிறப்பாக செயல்படும் காவல் துறையினரை பெரிதும் பாராட்டி ஊக்குவிக்கிறார். இவர் ஏற்கனவே நாமக்கல்லில் S.P யாக இருந்தபோது இவரின் அதிரடிகளால் அப்பகுதி மக்கள் இவரை பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் கொரோனா வைரஸிலிருந்து முகக்கவசம் எப்படி நம்மை பாதுகாக்கிறதோ, அதேப்போல் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைகவசம் அணிவதன் அவசியத்தையும் பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறார். மேலும் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது, குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி, போன்ற அறிவுரைகளை மக்கள் கடைசிவரை கடைபிடிப்பதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று பொதுமக்களுக்கு நாள்தோறும் அறிவுறுத்துவதை தனது வழக்கமாக கொண்டுயிருக்கிறார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் முடுக்கிவிடுகிறார். இவரின் மக்கள் சேவையை கோவை பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.

            

அதிகம் படித்தவை

^