Posted Date : 20-Sep-2022
Last updated : 20-Sep-2022
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பிரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வார்டு உறுப்பினரை வெட்டி படுகொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு கிராமத்தில் லோகேஸ்வரி என்ற பெண் கள்ளச்சந்தையில் மது விற்றதாகவும், அதனை ஊராட்சி கவுன்சிலர் சதீஷ் தட்டிக் கேட்டு போலீசில் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், லோகேஸ்வரி வீட்டு வாசலில் சதீஷ் உடல் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. கொலைக்கு காரணம் எனக் கருதப்படும் லோகேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.