மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து

கொரோனா காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.கொரோனோ காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் உதவி பொறுப்பு ஆணையாளர் விமலா கூறியுள்ளார்.சுப்ரமணிய சுவாமி- வள்ளி,தெய்வானை திருக் கல்யாணம் நடைபெறும் என்றும், சிறிய தேரில் வீதியுலா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை

^