மாத ராசி பலன்
மீனம்
ரகசியத்தை கட்டிக்காப்பதில் வல்லவர்களான மீன ராசி அன்பர்களே!
உங்களுக்கு கடந்த மாதத்தை போன்றே நற்பலன்கள் கிடைக்கும். 5-ம் இடத்தில் இருக்கும் குரு தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் மே 3ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நற்பலனைத் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு கூடும். மாத பிற்பகுதியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப் பளு அதிகம் என்றாலும், கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு வேறு இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். மே 8,9 சிறப்பான நாட்களாக அமையும்.வியாபாரிகளுக்கு மாதத் தொடக்கத்தில்
புதனால் சிறிது பாதிப்பு வரலாம். ஏப். 30 மே 1,2ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறலாம். புகழ் , கவுரவத்திற்கு பங்கம் வராது.
அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலன் காண்பர். மே 2க்கு பிறகு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் ஆலோனை கிடைக்கும்.
விவசாயிகள் சிறந்த மகசூல் பெறுவர். கோதுமை, கேழ்வரகு, சோளம் பயிர்கள் மூலம் நல்ல மகசூல் உண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் மே 2க்கு பிறகு கைகூடும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு மே 3க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஏப். 21,22ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாள்: ஏப்.14, 17, 18, 21, 22, 28, 29, 30, மே 1, 2, 8, 9, 10, 11, 14.
கவன நாள்: மே 3, 4 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 8, 9 நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்: சூரியனை காலையில் வணங்குங்கள். சிவன் , பார்வதி வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.