குரு பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

ரிஷபம் 80/100

எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்

குரு தனது 5-ம் பார்வையால் உங்க ளின் 9-ம் வீட்டை பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், தொட்டது துலங்கும். மூத்த சகோதர வகை யில் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதுப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், தள்ளிப்போன வேலைகள் முடியும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. 20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குரு செல்வதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள்.

உங்கள் சப்தம – விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம்- கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகமாகும். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். 17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால், குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வரக்கூடும். சிறு சிறு விபத்து களும் ஏறப்டலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். மாற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை பிரதானமான இடத் துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாவர். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்று மதி – இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும்.

உத்தியோகத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத் துவம் தருவார்கள்; உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.

கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு மன ஆறுதல் தருவதுடன், புகழ், கௌரவத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: 

திருவிடைமருதூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீபெருமுலையாள் உடனுறை ஸ்ரீமகாலிங்க சுவாமியை பிரதோஷ நாளில் இளநீர் கொடுத்து வணங்குங்கள். வெற்றி கிட்டும்.

அதிகம் படித்தவை

^